திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் ஓட்டுனர் உரிமம், ஓட்டுநர் பயிற்சி உரிமம், உரிமம் புதுப்பித்தல், வாகனங்களுக்கு தரஆய்வு உள்பட பல்வேறு பணிகளுக்கு சுற்றுப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்களும், வாகன ஓட்டிகளும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 17 ஆயிரத்து 48 இருசக்கர வாகனங்கள், 3 ஆயிரத்து 514 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 562 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 300 பேருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் தெரிவித்துள்ளார்.