சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

1565பார்த்தது
சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
அப்போது அவருக்கு 17 வயது பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்த மாணவியை தேனிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு மாணவியை மீட்டு போக்சோசட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து இதை ஏக காலத்தில் மணிகண்டன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

தொடர்புடைய செய்தி