தாராபுரத்தில் தடையை மீறி மது விற்ற முதியவர் கைது
மிலாடி நபி திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று(செப்.17) விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் சட்டவிரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. ஆனாலும் இந்த எச்சரிக்கையை மீறி தாராபுரம் அருகே உள்ள வரபாளையம் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (வயது 65) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து காவல்துறை அவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.