செல்போனை பறிகொடுத்த வட மாநிலத் தொழிலாளி - மீட்டு கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வெங்கிட்டாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலை மில்லில் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருபவர் ஒரிசாவை சேர்ந்த சுன்சுன் குமார். நேற்று நூற்பாலை விடுமுறை என்பதால் சுன்சுன் குமார் நேற்று சொந்த வேலை காரணமாக பல்லடம் சென்று விட்டு பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில் நூற்பாலைக்கு திரும்ப சென்றபோது தனது செல்போனை தவற விட்டு உள்ளார். இந்நிலையில் பல்லடம் அரசு பேருந்து பணிமனையில் நகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் உமாசங்கர் என்பவர் பணி முடிந்து காம நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு அதே பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து காம நாயக்கன் பாளையம் பகுதி அருகே பேருந்து செல்லும் போது சுன்சுன் குமார் தவறவிட்ட செல்போனை உமாசங்கர் எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த செல்போனை மீட்டு காம நாயக்கன் பாளையம் போலீசார் மூலமாக சுன்சுன் குமாரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். வடமாநில தொழிலாளி தவற விட்ட செல்போனை அரசு பேருந்து ஓட்டுநர் பத்திரமாக மீட்டு கொடுத்தால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.