திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த முதிய விவசாய தம்பதியான பழனிச்சாமி 80, பர்வதம் 70 என்ற இருவரையும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
வீடு திறந்திருப்பதை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தம்பதியை கொன்றது தம்பதி வீட்டருகில் வசிக்கும் ஒருவரே என தெரிய வந்துள்ளது. கொலை செய்து விட்டு தப்பித்து செல்லும்போது விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.