தெரு நாய்கள் கொடூரமாக கடித்ததில் மூன்று ஆடுகள் உயிரிழப்பு

72பார்த்தது
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் மண்டலம் ஐந்தாவது வார்டு வாவிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி. , இவர் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த வெறி நாய் கும்பல் பட்டியில் இருந்த மூன்று ஆடுகளை கொதூரமாக கடித்ததில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மேலும் ஒரு சில ஆடுகள் படுகாயங்கள் அடைந்தனர். இந்நிலையில் வாவிபாளையம்,. , நெருப்பெரிச்சல், , குருவாயூரப்பன் நகர். , சேடர்பாளையம், கூலிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதுவரை அப்பகுதி பொதுமக்கள் உட்பட ஆடு மாடுகளை கடி, ப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருவதாகவும். , அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி