உடுமலை அருகே மின்னல் தாக்கி ஆடு உயிரிழப்பு

81பார்த்தது
உடுமலை அருகே மின்னல் தாக்கி ஆடு உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆண்டிய கவுண்டனூர் கிராமம் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகாத்தாள். இவர் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று ஆண்டியகவுண்டனூர் பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது முருகாத்தாள் வளர்த்து வந்த ஆடு எதிர்பாராத விதமாக இடி தாக்கி பலியானது. இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கால்நடை டாக்டர் மூலமாக ஆட்டுக்குட்டிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இறந்த ஆட்டுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி