திருப்பூர் மாவட்டம்
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனசரக அலுவலகத்தில் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் ஆலோசனைப்படி துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா முன்னிலையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மேற்படி முகாமில் வனப் பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் , சர்க்கரை அளவு மற்றும் கண், பல் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது மருத்துவ முகாமில் பொது மருத்துவர் கண் மருத்துவர் பல் மருத்துவர் உட்பட 5க்கும் மேற்பட்ட
சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இலவச மருத்துவமுகாமில் உடுமலை வனச்சரகர் மணிகண்டன் திருப்பூர் ரோட்டில் கிளப் நிர்வாகிகள் , ராம் மருத்துவமனை , கண் மருத்துவமனை, ஹரிஷ் பல் மருத்துவமனை மருத்துவர்கள்
உடுமலை மற்றும் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள
வன ஊழியர்கள் வனக்காப்பாளர்கள்
பலர் கலந்து கொண்டனர்.