மின்சார கட்டணம் உயர்வு - சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

54பார்த்தது
மின்சார கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.



மத்திய மாநில அரசுகள் கொண்டுவந்த மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து சிபிஐ கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் பல்லடம் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் நதியா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி