பல்லடத்தில் மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை எம். ஜி. ஆர். நகரில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளி கருப்பசாமி என்பவரது வீட்டின்மேற்கூரை சூறைக்காற்றால் முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதன் இடிபாடுகள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மேல் விழுந்து அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன. இதனால் தற்போது அந்த தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே கருப்புசாமி வீடு அருகே இருந்த 2 ஓட்டு வீடுகளும், சூறைக்காற்றால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சூறைக்காற்றில் வீடுகள், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்த நிலையில், அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்