பல்லடம் நிலத்தகராறில் கவுன்சிலரின் அண்ணன் அடித்து கொலை

1பார்த்தது
பல்லடம் நகராட்சி கல்லம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (53). இவர், தெக்கலூர் பகுதியில் ஓ. இ. மில் நடத்தி வருகிறார். இவருக்கு கல்லம்பாளையம் பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. அருகில் பழனிச்சாமி (51) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இருவருக்கும் இடையே நில எல்லை பிரிப்பு விவகாரத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பழனிச்சாமி தரப்பினர் நில அளவீடு செய்து கம்பி வேலி அமைக்க முயன்றனர். வருவாய்த்துறையினர் ஆய்வு செய்யாமல் நில அளவீடும் செய்யாமல் வேலி அமைப்பதை கண்ட நாகராஜ், தனது உறவினர்களுடன் சென்று கம்பி வேலி அமைப்பதை தடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி தரப்பினர் நாகராஜை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில், காயமடைந்த நாகராஜிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த நாகராஜியின் அண்ணன் பாலகிருஷ்ணன், அவரை மீட்டு சிகிச்சைகாக பல்லடம் மருத்துவமனையில் அனுமதித்தார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக சேட பழனிசாமி (51). அனுப்பர்பாளையத்தை கார்த்திக் (29), ஆறுமுத்தம்பாளையத்தை சேர்ந்த சண்முகமூர்த்தி (55) ஆகியோரை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி