பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபாளையம் புதூர் மற்றும் சித்தம்பலம் ஊராட்சி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன். சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமை திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் துவங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, வீட்டுமனை தடையில்லா சான்று, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளுக்காக மனு அளித்த பொது மக்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 750 மனுக்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளது.