பல்லடத்தில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய் தது. அப்போது பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கறிக் கோழி பாரம் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந் தது. அதன் பின்னால் மற்றொரு கறிக்கோழி பாரமேற்றிய வேன் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முன்னாள் சென்ற வேன் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் சென்று கொண்டிருந்த வேன் முன்னால் சென்ற வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் வந்த
போக்குவரத்து போலீசார் மற்றும் போலீ சார் இணைந்து விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத் தினர். இதனால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் நிலைமை சீராகி வாகனங்கள் சென்றன.