பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது வேன்மோதி விபத்து

77பார்த்தது
பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது வேன்மோதி விபத்து!!

மூன்று பேருக்கு பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை!!!


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அன்னூரிலிருந்து திருச்சந்தூர் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த எட்டு பேர் இரண்டு கார்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்று விட்டு பல்லடம் வழியாக வீடு திரும்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்லடம் சந்திப்பில் வலது புறம் திரும்ப, அன்னூரிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற வேன் காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த மூன்று பேர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வேனில் வந்த பயணிகளில் இருவருக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி