பல்லடம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 19 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்!
ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை!!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வேல்ராஜ் 29. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 19 கிலோ குட்காப்பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேல்ராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரை பல்லடம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் கொண்டு வந்த சாக்கில் சுமார் 19 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் வேல் ராஜை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக கொண்டு வந்த 19 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்து வேல்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 19 கிலோ குட்கா பொருளை விற்பனைக்காக கொண்டு செல்லும் வழியில் போலீசாரின் வாகனம் தணிக்கையில் பிடிபட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.