மலையம்பாளைத்தில் நடைபெற்ற 125 வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா

66பார்த்தது
மலையம்பாளைத்தில் நடைபெற்ற 125 வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா
பல்லடம் அருகே மலையம்பாளைத்தில் நடைபெற்ற 125 வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா

திருப்பூர் அருகே மலையம்பாளையத்தில் உள்ள காலபைரவர் திருக்கோவிலில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 125 ஆவது அரங்கேற்ற விழா நேற்று நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 300 பேர் ஒரே சீருடையில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு தாளத்திற்கு ஏற்ப கும்மியடித்து மகிழ்ந்தனர். இந்த அரங்கேற்ற விழாவில் ஏராளமான பள்ளி சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட 300 பேர் கும்மியாட்டத்தில் பங்கேற்ற நிலையில் அங்கு வந்த குழந்தை ஒன்று தாளத்திற்கு ஏற்ப கும்மியாட்ட கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆர்வத்தோடு அந்த குழந்தை நடனமாடியதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். மேலும் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவில் சார்பில் இந்த கோடை விடுமுறையில் மட்டும் 40 ஊர்களில் அரங்கேற்றம் செய்துள்ளதாகவும், பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தை அரசு விழாக்களில் சேர்க்க வேண்டும் என கும்மியாட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி