பல்லடத்தில் பிடிபட்ட 11 டன் குட்கா அழிப்பு

80பார்த்தது
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபளையத்தில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக எடுத்து வரப்பட்டிருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 11 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் மூன்றை கோடி ரூபாய் மதிப்பிலான 11 டன் குட்கா பொருட்களை கள்ளிமேடு அருகே குட்டையில் கொட்டி பல்லடம் காவல்துறையினர் தீயிட்டு அழித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி