திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை பயன்பாடு இன்றி பூட்டப்பட்டு பாழாக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் சிறப்புடன் துவங்கப்பட்டு, தாய்மார்களின் பேராதரவுடன் செயல்படுத்தப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை தற்போது கேட்பாரற்று கிடைக்கிறது. இதை அதிமுகவினரும் கவனத்தில் எடுத்து, தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க முயற்சி எடுக்காதது வேதனைக்குரிய விஷயமாகும். இதனால் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.