சாலை விரிவாக்கப் பணிகள் எப்போது நிறைவு பெறும்

1563பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரிலிருந்து கடத்தூர் செல்லும் சாலை 2. 68 கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
90 சதவீத பணிகள் முடிவு பெற்ற நிலையில், இன்னும் 10 சதவீத பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. குறிப்பாக சாலை நடுவே கோடு வரைதல், வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமக வாகன ஓட்டிகள் தாறுமாறாக அதிவேகமாக செல்வதால்,
விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :