திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் மின்தடை ஏற்பட்டது. கணியூர் ஜோத்தம்பட்டி கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்,
ஆறு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதனால் மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் நிறுவனங்கள், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். விடுமுறை நாட்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனால் குழந்தைகளும் மற்றும் வேலைக்கு செல்வோரும், அவதி அடைந்துள்ளனர்.