திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று எஸ் பெண்டு என்ற வளைவு பகுதியில் லாரி ஓன்று பழுதாகி நின்றதால் இந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சாலை விரிவாக்கம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.