திருப்பூ
ர் மாவட்டம் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. வழக்கமாக 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 30 ஆயிரம் பெட்டிகள் வரும் நிலையில், தற்போது 2000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன. மழை, பனிப்பொழிவு போன்ற காரணங்களால் தக்காளியை நீண்ட தூரம் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போழுது 14 கிலோ கொண்ட பெட்டி 200 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.