மடத்துக்குளம் மக்களை ஏமாற்றிய மழை

1826பார்த்தது
மடத்துக்குளம் மக்களை ஏமாற்றிய மழை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் நேற்று மாலை சாமராயபட்டி, குமரலிங்கம், கொழுமம், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
ஆனால் கணியூர், ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.
இந்நிலையில் இன்று காலை கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை வேளையில், கருமேகம் சூழ்ந்தது ஆனால் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. கனமழை பெய்யும் என எதிர்பார்த்த பொதுமக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அனேகமாக இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையத்தின் தகவல் கிடைத்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி