திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி குமரலிங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி 09-10-2023 அன்று நடைபெற்றது. தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
தமிழாசிரியர் திருமதி செல்வமணி
வரவேற்புரை நல்கினார்.
சிறப்பு விருந்தினராக
முனைவர் திருமதி த. அருள்ஜோதி கலந்து கொண்டு தமிழின் தொன்மையும் தமிழறிஞர்களின் தொண்டும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முதுகலை ஆசிரியர் அலமேலு மங்கை நன்றி கூறினார்.