திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கொழுமம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் காந்தி நகர் அருகே எஸ்வீபுரம் பகுதியில் சாலை சேதம் அடைந்துள்ளது. எனவே இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது சாலை அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.