திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி பஞ்சாயத்து உடையார்பாளையம் கிராமத்தில், கோவில் வீதி முதல் மெயின் ரோடு வரை குப்பைகளை எடுத்து சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து வஞ்சிபுரம் கிராமத்தில் குப்பைகளை எடுத்து சுத்தம் செய்யப்பட்டு, மலையாண்டிபட்டினம் கிராமத்தில் ரோட்டின் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த முட்புதர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் உத்தரவின் படி அகற்றப்பட்டது.