தாமதமாக வந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி

1305பார்த்தது
தாமதமாக வந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இன்று மதியம் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிக நேரம் மின்தடையால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மின்தடை குறித்து மின்வாரியத்துறை வெளியிட்டுள்ள
குறுஞ்செய்தி தாமதமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
மாலை 5 மணிக்குள் மின் தடை சரி செய்யப்படும் என அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தி, 6 51 மணிக்கு ஒவ்வொருவருடைய தொலைபேசி எண்களுக்கு வந்து அடைந்துள்ளது. ஆனால் 6: 30 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மின்சார வாரியம் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியியை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி