பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் BSNL அலுவலகம் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் திருடர்களாக இருக்கக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீப காலமாக இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் திருட்டு சம்பவங்களும்,
அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பராமரிப்பின்றி புதர்கள் வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது.
சம்பந்தப்பட்ட BSNL அலுவலக அதிகாரிகள் வளாகத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றியும், சேதமடைந்த ஊழியர் குடியிருப்பு கட்டிடத்தை பராமரிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை மற்றும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி