திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு கிராமம் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை முன்பாக ரம்ஜான் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதற்காக பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து குத்பா பள்ளியில் இமாம் தொழுகை நடத்தினார். இந்த தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.