திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை செல்லும் பிரிவில் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பயணிகள் இருக்கை உடைந்து சேதம் ஆகியுள்ளது எனவே பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டி உள்ளதால் பயணிகள் இருக்கையை பாரமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.