திருப்பூர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஓன்றியம் பெரியவாளவாடியில் விவசாயிகள் முருங்கை பீன்ஸ் சாகுபடி செய்த நிலையில் தினசரி சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வந்தனர். கேரளாவில் நல்ல உணவுப் பொருளாக இருந்த காரணத்தால் ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்சமயம் கேரளா வியாபாரிகள் வருகை குறைவு காரணமாக ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.