திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சியில் உள்ள குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2025-2026 கல்வியாண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமதா உத்தமராஜ், மக்கள் பிரதிநிதி ராதாமணி செல்வராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நந்தினி, பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.