திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணை கடந்த வாரத்தில் வெளியானது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் அடிப்படையில், நகர் புறத்திற்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளின் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால்
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 3000 க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், அதை நம்பிய 300-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனை அடுத்து சமூக ஆர்வலர் காடாம்புரி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஜோத்தம்பட்டி ஊராட்சி மன்ற
வளாகம் முன்பாக,
பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பங்கேற்ற பொதுமக்கள் அனைவரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது