மடத்துக்குளம்: காரத்தொழவு ஊராட்சியில் ஆட்சித் தலைவர் ஆய்வு

81பார்த்தது
மடத்துக்குளம்: காரத்தொழவு ஊராட்சியில் ஆட்சித் தலைவர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக காரத்தொழவு பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலையை திடீரென ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி