திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலம் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் இப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.