திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு தேர்வு முடியும் வரை தொடர்ந்து சிறப்பு வகுப்பு மட்டும் மாலை நேரம் சுண்டல் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கரமநல்லூர் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி. தாமோதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணீஸ்வரி மற்றும் ராஜேந்திரன், பெற்றோர்கள், மாணவ மாணவியர், ஆசிரியர், பெருமக்கள் கலந்து கொண்டனர்.