திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன மடத்துக்குளம் வழியாக பழனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகளும் தாராபுரம் உடுமலை கமல் லிங்கம் வழித்தடத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை பழனி செல்லும் 150க்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் சாலை ஓரம் பயணிகளை இறக்கி செல்கின்றன.
இதனால் ஒரு சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.