மடத்துக்குளம்: புதர் மண்டி காணப்படும் அமராவதி ஆறு

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆறு கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். 

மேலும் இந்த ஆறு வழியாக கரூர் வரை தண்ணீர் சென்று வரும் நிலையில் கரையோர கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தற்போழுது பல இடங்களில் புதர் மண்டி காணப்படுகிறது. 

இதனால் நீர் வழித்தடம் மாறிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி