திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டி ஊராட்சி பகுதி வழியாக செல்லும் நான்கு வழிச்சாலை பகுதியில் நீர் வழித்தடம் உள்ள இடங்களில் கடந்த சில நாட்களாகவே சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இறைச்சிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அருகில் தூர்நாற்றம் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளதால் வேடப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.