திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம்
தளபதி அரங்கத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் உயர்திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் உயர்திரு. இல. பத்மநாபன் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் படியூரில் நடைபெற்ற மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அனைவரையும் கெளரவிக்கப்பட்டது.
இதில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஈஸ்வர சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.