ஆபத்தான தொட்டிக்கு மூடி போட வலியுறுத்தல்

1054பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் சாலையில் போத்தநாயக்கனூர் பிரிவு
பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பாழடைந்து பரிதாபமாக காணப்படும் நிழற்குடை இரவு நேரங்களில், மது கூடாரமாகவும் செயல்படுகிறது. இதனிடையே நிழற்குடைக்கு முன்பாக தண்ணீர் குழாய் வாழ்வு அமைக்கப்பட்ட ஆறடி கீழ்நிலை தொட்டி உள்ளது.
இதற்குப் போதிய மூடி போடும் வசதி செய்யப்படாததால், இரவு நேரத்தில் பயணிகள் நிழற்குடைக்கு வரும் பொதுமக்கள் தவறி விழும் ஆபத்தான சூழல் உள்ளது. எனவே இதற்க்கு மூடி அமைக்க வேண்டும் எனவும், பயணிகள் நேர்கொடையை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி