கடத்தூரில் அங்கல்வாடி கட்டிடம் திறப்பு விழா

73பார்த்தது
கடத்தூரில் அங்கல்வாடி கட்டிடம் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் ம. கா தே. ஊ. வே. திட்டத்தின் மூலம் 10. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இன்று (10 7 2024 )ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலவேணி கலையரசு அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். அங்கன்வாடி மையத்தின் சமையலறை கட்டிடத்தை மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் ஏ சாகுல் அமீது அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக மாவட்டக் கழக. பிரதிநிதி கு கலையரசு அவர்கள்முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்தின் மடத்துக்குளம் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கடத்தூர் ஊராட்சிதுணைத் தலைவர் அப்துல் பாரூக், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கவிதா செந்தில்குமார், கனி சாம்புகன் , பிரேமாகாளிமுத்து, தாண்டீஸ்வரி, கார்த்திக் பிரபு , கிளைக் கழக செயலாளர் வெள்ளியங்கிரி, மாவட்ட அயலக மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மோகன் , கே என் அருள்மணி, முன்னாள் கப்பல் படை வீரர் கே கே ஜெயராமன் பழனிச்சாமி அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி பணியாளர்கள் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி