திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே புதிய நான்கு வழி சாலை பகுதியில், மடத்துக்குளம்- கணியூர் பிரதாண சாலையை இணைக்கும் சர்வீஸ் சாலையில் அவ்வப்போது கனரக வாகனங்கள் ஒருவழி பாதையில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சப்பட்டுள்ளனர். குறிப்பாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் வடக்கு பகுதியில், சில கனரக வாகனங்கள் எதிர் திசையில் செல்கின்றன.
அதேபோல் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் பல வாகனங்கள் செல்கின்றன. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டுகளுக்கு குழப்பம் ஏற்பட்டு, பலமுறை விபத்துகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.