திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் சுரக்காய் விவசாயம் அதிக அளவு சாகுபடி செய்திருந்தனர். கொடி வகை பயிரான சுரைக்காய் பந்தல் முறைகள் மட்டுமல்லாமல் தரையிலும் பரப்பி விட்டும் சாகுபடி செய்யலாம் எனவும் வழக்கமாக ஒரு கிலோ சுரக்காய் ஐந்து முதல் எட்டு ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது வரத்து மிகவும் குறைந்துள்ளதால் விலை கிலோ 22 வரை உயர்ந்துள்ளது. இதனால் இதே விலை நீடித்தால் வரும் காலங்களில் சுரக்காய் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.