காங்கேயத்தில் அனுமதி இன்றி வெட்டப்படும் மரங்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

63பார்த்தது
காங்கேயத்தில் அனுமதி இன்றி வெட்டப்படும் மரங்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயம் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வேலிக்காடுகள் ஆகும், விளை நிலங்களாகவும், கால்நடைகள் மேயும் நிலப்பரப்பாகவும் காணப்படுகிறது. பெரும்பாலான கிராமத்து சாலைகளின் இரு ஓரங்களிலும் மரங்கள் காணப்படுகிறது. இந்த நிலையில் சாலையோரம் மரங்கள் பல்வேறு இடங்களில் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இதனால் பசுமை இழந்து நிலத்தின் வெப்பநிலை அதிகரிக்கவும் நிலத்தின் ஈரப்பதம் குறையவும் சாலையோர நிழல்கள் இன்றியும் தேவையற்ற முற்பகர்களாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. 

மேலும் இவ்வாறு வெட்டப்படும் மரங்களை சிலர் உரிய அனுமதி இன்றி கடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் வீரணம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகவும் இது குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி