திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு எழுத வந்திருந்தனர் அவர்களை வாழ்த்தி அறிவுரைகள் வழங்கி உற்சாகமாக தேர்வு எழுதிட குப்பம்பாளையம் ஆசிரியர்கள் மலர் முருகன் மற்றும் கிருஷ்ணன் தேர்வு மையத்திற்கு வெளியே வந்து வாழ்த்து தெரிவித்தனர் முன்னதாக கடந்த ஒரு மாதங்களாக குப்பம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் ஒரு நாள் கூட லீவு விடாமல் நடத்தியும் தினசரி சிற்றுண்டி வழங்கியும் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு பாடத்தில் தங்கள் வகுப்பு பாடத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு அறுசுவை உணவுகளும் வெயிலுக்கு ஏற்ப தர்பூசணி மோர் ஜூஸ் வகைகளும் வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளனர் தொடர்ந்து மூன்று மாதங்களாக மாலை வேலையில் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக சூடான சுண்டல் வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமையில் ஆசிரியர்கள் மலர் முருகன் மற்றும் கிருஷ்ணன் மாணவ மாணவியரை உற்சாகமாக தேர்வு எழுதிட வழி அனுப்பி வைத்தனர்
பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு ஆகியோர் குப்பம்பாளையம் ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு பணிகளை பாராட்டியுள்ளனர்