திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளியின் பின் புரத்தில் உள்ள ராஜ வாய்க்கால் ஓரத்தில் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன இதனால் விவசாயிகள் பலமுறை வாய்க்கால் பகுதியை தூர்வார கோரிக்கை வைத்து உள்ளனர் நேற்று அமராவதி அனையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடபட்டுள்ளது இந்த நிலையில் நள்ளிரவில் தென்னை மரங்கள் தீ பிடித்து எறிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால் ஓரத்தில் உள்ள புதர்கள் சுத்தம் செய்யாமலும் தூர்வார படாமலும் இருந்த காரணத்தால் , தென்னை மரங்கள் தீயில் கருகி சேதம் இதுசம்பந்தமாக கணியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் நேரில் வந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திருக்கு விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்