திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சில தினங்களுக்கு முனு காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறமாக நுழைந்து பள்ளியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் , விளையாட்டு உபகரணங்கள், வகுப்பு அறையில் உள்ள ஜன்னல்கள் , டியூப் லைட் , நூற்றாண்டு நினைவு அரங்கத்தின் மேற்கூரைகளை உடைத்து , பள்ளி மாணவிகள் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடத்தில் உள்ள பைப் லைன்கள் என பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். சேதப்படுத்திய பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 60, 000/- ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் குறித்து பெற்றோர் சங்க தலைவர் தலைமையில் , தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் கணியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று மாணவ மாணவியர்களுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சந்தேகப்படும் அளவில் யாராவது இருந்தால் உடனடியாக ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டுவர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிருப்தியான சூழல் ஏற்பட்டுள்ளது.