திருப்பூர் மாவட்டம் மடத்
துக்குளம் அருகே கணியூரில் அமராவதி ஆற்றங்கரையில் ஆடி பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கணியூர் பேரூராட்சி சார்பில் வார்டு எண் 10-ல் கடத்தூர் ரோடு அமராவதி ஆற்றுப்பாலம் அருகே எரிமேடை செல்லும் வழி, எரிமேடை அமைந்திருக்கும் இடம், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் நான்கு இடங்களில்
முட்புதர்கள் அகற்றப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.