திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே
இந்த ஆண்டு 250 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கரும்பு பதிவு செய்வதை நிறுத்தி விட்டால் வெளிச்சந்தையில் கரும்பு விலை மிகவும் குறைந்து விடும் என்பதால், விவசாயிகள் மட்டுமல்லாமல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.